கண்ணதாசன் வைர வரிகள்
"நினைபதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்ல மனிதன் வீட்டினிலே ! "
ஆஹா கவிஞர் கண்ணதாசனின் வைர வரிகள். எத்தனை உண்மை. கண்ணதாசன் இன்னொரு திருவள்ளுவர் என்பதில் என்ன சந்தேகம்.
"எண்ணித் துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு "
என்பதை தானே, "நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை" என்றார் கவிஞர்.
நாமும் சில சமயங்களில் நடந்ததை பேசி வருந்துகிறோம், கவிஞர் அதை சொல்லவில்ல, அதையே நினைத்து நினைத்து புலம்புவதே தவறு என்கிறார்.
"எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும் "
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும் "
இதை தானே ஆதி சங்கரர்,
"புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்"
என்று சொன்னார்.
கவிஞர் படித்து எட்டாவது. எட்டாவது அவரை எட்டாவது இடத்திலே வைத்ததோ !